நண்பர் சக்ரி பில்லா – 2 இயக்க இருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள். திடீரென ஒரு நாள் பேசிக் கொண்டிருக்கும் போது, ‘அருண் – நீங்க வசனம் எழுதறீங்களா?’ என்று கேட்டார். “பாஸ் – நான் எழுதினாலும் இதெல்லாம் நடக்குமா?!” என்று கேட்டேன். “இல்ல இல்ல எனக்கு அனுப்புங்க – முயற்சி பண்ணி பார்க்கிறேன்!” என்று சொல்ல, கதை, சூழ்நிலை, கதாபாத்திரங்கள் என்று எதுவும் முடிவாகாத ஆரம்ப நிலையில் வித்தியாசமாக ‘பஞ்ச் டயலாக்’ எழுத சொல்லிக் கேட்டார். நானாகவே சில காட்சிகளை யோசித்து, சில வசனங்கள் எழுதினேன். இதோ நான் எழுதிய ‘முத்திரை வசனங்கள்’ – அட…அதான் பஞ்ச் டயலாக்ஸ்’ங்க! (அப்புறம் வேறு சில காரணங்களால் நான் பில்லா-2ல் வசனம் எழுதாவிட்டாலும், எழுதியதை வீணாக்காமல் உங்கள் பார்வைக்கு இதோ). சக்ரியும் நானும் நல்ல நண்பர்கள். அவர் வெற்றியடைய மீண்டும் வாழ்த்துக்கள்.
சிவனுக்கு நெத்திலே கண்ணு. இந்த பில்லாவுக்கு சுத்தியும் கண்ணு!
நான் எனக்குத் தப்பு பண்ணவங்களைப் பத்தி நெனைக்கறதேயில்லை. ஆனா துரோகம் பண்ணவங்களை மறக்கறதேயில்லை!
தல இருக்கும் போது வால் ஆடக்கூடாதும்பாங்க – நான் தான் இங்கே இருக்கேன்ல….ஆடாதே, அறுத்துடுவேன்!
என்னைப் புடிக்க நெனைக்கறவங்க நெறைய பேரு – ஒன்னோட டோக்கன் நம்பர் 2008 – ஆல் த பெஸ்ட்!
ஒரு கிரைமை சால்வ் பண்ண போலிஸ் நாலு விதமா யோசிக்கும். சிபிஐ எட்டு விதமா யோசிக்கும் – ஆனா அந்தக் கிரைமையே பில்லா தான் யோசிச்சுருப்பான்!
சிவா, ஜீஸஸ், அல்லா….அதுக்கப்புறம் பில்லாடா!
- அருண் வைத்யநாதன்